அஜித்துக்கு பத்மபூஷன் விருது விஜய்க்கு போடும் ஸ்கெட்ச்சா?!.. பீதிய கிளப்புறாங்களே!..

Published on: March 18, 2025
---Advertisement---

Ajithkumar: கடந்த 30 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் அஜித்குமார். அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் இதுவரை கிட்டத்தட்ட 63 திரைப்படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் படங்களில் நடித்தவர் ஒரு கட்டத்தில் மாஸ் ஹீரோவாக மாறினார். அஜித்தின் அசுர வளர்ச்சி என்பது கடந்த 15 வருடங்களில்தான்.

கடந்த 10 வருடங்களில்தான் அவருக்கு அதிக ரசிகர்கள் உருவானார்கள். விஜய் ரசிகர்களுக்கு இணையாக அவர்களும் டிவிட்டரில் களமாடி வருகிறார்கள். அஜித் இப்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களை முடித்துவிட்டு கார் ரேஸில் கலந்துகொள்ள போய்விட்டார்.

அஜித் கார் ரேஸ்: சில நாட்களுக்கு முன்பு துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித் கேப்டனாக இருந்த அணி 3வது பரிசை வென்றது. இதுவரை இந்தியாவை சேர்ந்த யாரும் அதில் பரிசு வாங்கியதில்லை என்பதால் பலரும் அஜித்துக்கு கூறினார்கள். தற்போது வேறு சில நாடுகளில் நடக்கும் கார் ரேஸில் அஜித் கலந்துகொண்டு வருகிறார்.

பத்மபூஷன் விருது: இந்நிலையில்தான் அவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது கொடுத்து கவுரவித்திருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஜனாதிபதி கையால் இந்த விருதை அஜித் வாங்கவிருக்கிறார். தனக்கு விருது அறிவிக்கப்பட்டவுடன் நேற்று எல்லோருக்கும் நன்றி சொல்லி அஜித் தரப்பில் இருந்து அறிக்கையும் வந்தது.

அரசியல் காரணம்: பொதுவாக அரசியல் லாபத்திற்காகவே சிலருக்கு பத்ம பூஷன் விருதுகள் கொடுக்கப்படுவதாக ஒரு பேச்சு உண்டு. ரஜினிக்கு பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் பட்டம் கொடுக்கப்பட்டதன் பின்னணில் அரசியல் காரணங்கள் இருப்பதாக அப்போதே சொல்லப்பட்டது. இப்போது அஜித்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அஜித் ஒரு தொழில்முறை நடிகர் அவ்வளவுதான். ரஜினிகாந்த் அளவுக்கு கூட அவர் இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இல்லை. இது அவருக்கும் தெரியும்.மேலும், தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். அரசியலில் இருந்து முழுவதுமாக விலகி இருப்பவர். தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்த சிலர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக மொத்த ரசிகர் மன்றங்களையே கலைத்தவர்.

விஜய்க்கு செக்: அஜித்துக்கு போட்டி நடிகராக பார்க்கப்பட்டவர் விஜய். இப்போது அவர் அரசியலுக்கு போய்விட்டார். அதோடு, மத்திய அரசையும் அவர் விமர்சனம் செய்து வருகிறார். எனவே, விஜய் போட்டியாளரான அஜித் மற்றும் அவரின் ரசிகர்களின் ஆதரவு நமக்கு தேவை என்பதே இந்த விருதின் பின்னணி காரணமாக இருக்கலாம் என சிலர் பேச துவங்கியுள்ளனர்.

சமூகவலைத்தளங்களிலும் இந்த கருத்தை பலரும் பதிவிட்டு வருகிறார்கள். அஜித்தின் ரசிகர்களோ இதை மறுக்கிறார்கள். அஜித் 30 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். கார் ரேஸில் வெற்றி பெற்று பெருமை சேர்த்திருக்கிறார். அதனால் விருது கொடுத்திருக்கிறார்கள் என அவர்கள் முட்டு கொடுத்து வருகிறார்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment