சரக்கு பார்ட்டி!. ஜாலி டூர்!.. சந்தேக புத்தி!.. ஜெயம் ரவி விவாகரத்திற்கு பின்னால் உள்ள அதிர்ச்சி காரணங்கள்..
ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் பிரியப்போவதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இப்போது வரை இருவருமே அதை மறுக்கவில்லை. இந்நிலையில், இந்த விவாகரத்துக்கு பின்னால் இருக்கும் பல முக்கிய விஷயங்களை சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
மைசூர் மகாராஜா ஜெய சம்ராஜ்ய உடையார் மதராஸ பட்டணத்தின் கலெக்டராக இருந்தவர். அவர் சென்னையில் திருமணம் செய்து கொண்டவர்தான் கல்பனா. பேரழகி. அவருக்கு ஒரு மகன். ஒரு மகள். மகனின் பெயர் விஜயகுமார். அந்த விஜயகுமாரின் மனைவிதான் சுஜாதா. அதாவது ஜெயம் ரவியின் மாமியார். சுஜாதாவின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜெயம் ரவி.
ஆர்த்தி பணக்காரன் பெண் என்பதால் பார்ட்டிகளில் கலந்து கொள்வது, பப்புக்கு போவது, அடிக்கடி வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வது என ஜாலி பேர்வளி. திருமணத்திற்கு பின்னரும் இது தொடர்ந்தது. ஆர்த்தியின் நடவடிக்கை ஜெயம் ரவிக்கு பிடிக்கவில்லை. ஜெயம் ரவி படப்பிடிப்புக்காக வெளியூர் போனால் அவரின் உதவியாளரிடம் ‘இப்போது யாருடன் அவர் தங்கி இருக்கிறார்?’ என கேட்பார் ஆர்த்தி. மனைவி தன்னை சந்தேகப்படுவது ஜெயம் ரவிக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
ஜெயம் ரவி மாமியாரின் வீட்டில் தங்கி இருந்தார். சுஜாதா நல்ல நிர்வாகி. சின்னத்திரை தொடர்கள் மற்றும் சினிமாக்களை தயாரித்து வருகிறார். ஜெயம் ரவியை வைத்து சில படங்களை தயாரித்திருக்கிறார். இதில் சைரன் படம் மட்டுமே அவருக்கு ஓரளவுக்கு லாபத்தை கொடுத்தது.
பாண்டிராஜ் சொன்ன கதை சுஜாதாவுக்கு பிடித்துப்போக ரவியின் சம்பளம் எவ்வளவு என பேச்சு வந்தபோது ‘எனக்கு 20 கோடி’ வேண்டும் என ரவி சொல்ல நக்கலாக சிரித்தார் சுஜாதா. ‘உங்களின் மார்கெட் தெரியாமல் இருக்கிறீர்கள்?’ என சொல்ல ரவிக்கு கோபம் வந்துவிட்டது. ஆனாலும் ரவி உறுதியாக இருக்க பாண்டிராஜிடம் பட்ஜெட்டை குறைக்குமாறு சுஜாதா சொல்ல கோபப்பட்ட அவர் அட்வான்ஸை திருப்பி கொடுத்துவிட்டு விஜய் சேதுபதியிடம் சொல்லி ஓகே செய்துவிட்டார்.
இதனால் கோபப்பட்ட ஜெயம்ரவி மாமியாருடன் சண்டை போட்டார். ‘நீங்கள்தான் காரணம்’ என இருவரும் சண்டை போட ஈகோவாக மாறி பிரச்சனை ஆகிவிட்டது. ஆர்த்தி அம்மாவுக்கு சப்போர்ட் செய்ய விவாகரத்து வரை போய்விட்டது. ரவியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து ஆர்த்தி டெலிட் செய்ய அது உறுதியாகிவிட்டது’ என பயில்வான் பேசியிருக்கிறார்.