தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக வலம் வருபவர் நடிகர் விஜய். ரஜினிக்கு பின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருக்கிறார். இவரின் மாஸ்டர் திரைப்படம் மாஸ் வெற்றி அடைந்த பின், தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இவரின் இயற்பெயர் விஜய்தான். ஆனால், இவரின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கிறித்துவ மதத்தை பின்பற்ற துவங்கியதால் ஜோசப் விஜய் ஆனார். இது பெரும்பாலானோருக்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால், இந்த பெயருக்கு பின்னால் சில கதைகள் இருக்கிறது.
தன் மகனுக்கு விஜய் என பெயர் வைத்ததன் காரணம் பற்றி சமீபத்தில் ஒரு சினிமா விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், பாலிவுட்டில் அமிதாப்பச்சன் ஹீரோவாக நடித்த காலத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பார்கள். அதேபோல், நான் இயக்கிய பல திரைப்படங்களில் ஹீரோக்களின் பெயர் விஜய்தான். எனவேதான், என் மகனுக்கு விஜய் என பெயர் வைத்தேன் என தெரிவித்தார்.
ஆனால், விபரம் அறிந்த சில மூத்த சினிமா பத்திரிக்கையாளர்கள் வேறு மாதிரி சொல்கிறார்கள். எஸ்.ஏ.சந்திரசேகரின் தந்தை அதாவது, விஜயின் தாத்தா பெயர் நீலகண்டன். இவர் பழம் பெரும் சினிமா நிறுவனமான் விஜயா வாகினி ஸ்டுடியோவில் பணிபுரிந்தவர். விஜய் பிறந்த போது அவருக்கு பெயர் வைப்பதற்காக அவரை தூக்கிக்கொண்டு விஜயா வாகினி ஸ்டுடியோ நிறுவனர் நாகி ரெட்டியிடம் சென்றாராம். முதலில் பெண் குழந்தை என நினைத்த நாகி ரெட்டி தனது நிறுவனத்தின் பெயரான ‘விஜயா’ என பெயர் வைத்தாராம். பதறிய நீலகண்டன் இது ஆண் குழந்தை என அவருக்கு தெரிவிக்க, விஜய் என பெயர் வைத்தாராம் நாகி ரெட்டி.
விஜய் என்கிற பெயருக்கு பின்னால் இத்தனை காரணங்களா?…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…