சரியான விஷயங்கள் சரியான நேரத்தில் நடக்கும் என்பதற்கு உதாரணமாக ராணாவின் திருமண செய்திகள் அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது கடந்த 12-ம் தேதி ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவர் தான் எனது காதலி என உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
இவர் ஒரு இண்டீரியர் டிசைனர், மாடல் என பன்முகம் கொண்டவர். ராணாவின் வீட்டிலும் அப்பெண்ணின் வீட்டிலும் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டதால் திருமண நிச்சயம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்து சற்றும் எதிர்பார்க்காத வகையில் திடீரென ராணா – மஹீகா பஜாஜ் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதையடுத்து வருகிற ஆகஸ்ட் 8-ந் தேதி ராணாவின் திருமணம் ஹைதராபாத்தில் நடக்கவிருக்கிறது. ஆனால், அது கொரோனா பிரச்னையால் ராமநாயுடு ஸ்டுடியோஸில் தான் திருமணம் நடக்கப் போகிறதாம். திரைத்துறை சேர்ந்த யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை வெறும் 30 உறவினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். அவர்களும் கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர்.
அத்துடன் ஆங்காங்கே சானிடைசர் வைக்கப்படும். சமூக விலகல் கடைபிடிக்கப்பட்டு முழு பாதுகாப்பதுடன் இத்திருமணம் நடக்குமாம். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த பின்னரே திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவோம் என்று ராணாவின் அப்பா கூறியுள்ளார்.
SK 24:…
நடிகர் அஜித்குமாரின்…
Jailer 2:…
RJ Balaji:…
ஒட்டுமொத்த இந்திய…