தெலுங்கில் நேர்கொண்ட பார்வை – ரீ எண்ட்ரி கொடுக்கும் சூப்பர் ஸ்டார் !

இந்தி மற்றும் தமிழில் வெற்றி பெற்ற பிங்க் திரைப்படம் தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியில் அமிதாப் பச்சன் மற்றும் தப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சில கோடி பட்ஜெட்டில் உருவான அந்த திரைப்படம் கிட்டதட்ட 100 கோடி வசூல் செய்தது. இந்த படத்தின் கதை பிடித்துப் போன அஜித் அதை நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரிமேக் செய்து நடித்தார். ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்த இந்த திரைப்படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யான் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. போனி கபூர் மற்றும் தில் ராஜு ஆகியோர் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அரசியலுக்காக சினிமாவில் ஒதுங்கியிருந்த பவன் மீண்டும் படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளதி.

Published by
adminram