தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக இன்று மாலை முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இதையடுத்து இன்று நடைபெற்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு பொருட்கள் விலை இன்றி வழங்கப்படும்.கொரோனா நிவாரணமாக ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும். மேலும் நிவாரண நிதியாக 3250 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்’ என அறிவித்துள்ளார்.
மேலும் பொருட்களையும் பணத்தையும் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கூடாமல் இருக்க டோக்கன் வழங்கப்பட்டு அதன் படி விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் சுதா…
VijayTV: விஜய்…
AR Rahman:…
சூர்யாவின் படங்கள்…
நடிகர் பார்த்திபன்…