எனவே, தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக நேற்று தமிழக அரசும், மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடியும் அறிவித்துள்ளனர்.
நாடெங்கும் கொரோனோ ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழைகளுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களில் சிலர் உணவு உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர். ஆனாலும் பலரும் உணவின்றி வாடி வருகின்றனர். தமிழகத்திலும் இந்த நிலை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், ஊரடங்கு நீங்கிய பின் தேமுதிக சார்பில் ரூ.5 கோடி மதிப்புடைய நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தமிழகத்தின் உள்ள அனைத்து தொகுதிகளில் தேமுதிகவினர் மக்களின் குறையை கேட்டு அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…
கங்குவா படத்திற்கு…