ஞாபகம் இருக்கிறதா இந்த ரூபிணியை ? – மீண்டும் வருகிறார் நடிக்க !

90 களில் உச்சநட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை ரூபிணி மீண்டும் அரிதாரம் பூசி நடிக்க இருக்கிறார்.

90களின் ஆரம்பத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர் ரூபிணி. மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் அவரது நடிப்பும் சிவராத்திரி பாடலும் இன்றைய இளைஞர்களுக்கும் நினைவிருக்கும் ஒன்று.

இந்நிலையில் திருமணத்துக்குப் பின் நடிக்காமல் இருந்த அவர் இப்போது மீண்டும் சித்தி 2 சீரியலின் மூலம் நடிப்புத்துறைக்குள் ரீஎண்ட்ரி கொடுக்க உள்ளார். 20 வருடங்களுக்கு முன்னதாக சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி தொடரின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் ரூபிணி நடிக்க இருக்கிறார்.

Published by
adminram