More

பதவியை ராஜினாமா செஞ்சிட்டு போயிடுங்க! – ரஜினிகாந்த் காட்டம்

சிஏஏ விவகாரத்தில் நான் பாஜக ஆதரவாளர் என மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் கூறுவது வேதனை அளிக்கிறது.

Advertising
Advertising

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே எழுந்த மோதலில் இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்.   பலரும் காயமடைந்துள்ளனர். ஆனால், முஸ்லீம்களுக்கு ஒரு பிரச்சனை எனில் முதல் ஆளாக நான் குரல் கொடுப்பேன் எனக்கூறிய ரஜினி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவர் பாஜகவின் ஆதரவாளர் எனவும் பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில், இன்று போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ டெல்லியில் நடந்த கலவரத்திற்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம். கலவரத்தை அடக்க முடியாவிடில் மத்திய அரசு ராஜினாமா செய்து விட்டு போக வேண்டும். வன்முறையை தூண்டி விடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதே நேரம் சிஏஏ சட்டத்தை திரும்பப் பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. மேலும், சி.ஏ.ஏவுக்கு எதிராக போராடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை’ என அவர் தெரிவித்தார்.

Published by
adminram