More

துப்புரவு வேலை ராஜினாமா… ஊராட்சித் தலைவருக்கு போட்டி – நெகிழ வைக்கும் சரஸ்வதி கதை !

தான் பார்த்துக் கொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளி வேலையை உதறி எரிந்து விட்டு ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சரஸ்வதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

Advertising
Advertising

தமிழகத்தில் உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் 3 ஆண்டுகளாக நடக்காமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பின்னர் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஊராட்சியில் தான் பார்த்துக் கொண்டிருந்த துப்புரவு தொழிலாளர் வேலையை ராஜினாமா செய்த கான்சாபுரத்தைச் சேர்ந்த 63 வயதான சரஸ்வதி. தேர்தல் ரத்தானதால் அவர் தற்காலிக துப்புரவுப் பணியாளராக வேலைப் பார்த்து வந்தார்.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தேர்தலில் போட்டியிட்டார். இதையடுத்து அவர் 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பணக்காரர்கள் தேர்தலில் பணத்தை வாரியிரைத்து மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற சூழலில் சரஸ்வதியின் வெற்றி நம்பிக்க அளித்துள்ளது.

Published by
adminram

Recent Posts