என்னது சுறா படம் திரும்பவும் ரிலீஸா ? – கேரள ரசிகர்களின் விபரீத செயல் !

விஜய்யின் 50 ஆவது படமான சுறா கேரளாவில் மீண்டும் ஜனவரி 26 ஆம் தேதி ரிலிஸ் செய்ய கேரள இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

விஜய், தமன்னா மற்றும் வடிவேலு நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு அவரது 50வது படமான சுறா வெளியானது. இந்த படத்தை எஸ்பி ராஜ்குமார் இயக்கியிருந்தார். சங்கிலிமுருகன் தயாரித்த இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமான முறையில் வெளியிட்டது. ஆனால் மோசமான கதை மற்றும் திரைக்கதை காரணமாக இந்த படம் படுதோல்வி அடைந்தது.

அதுமட்டுமில்லாமல் இந்நாள் வரையில் சமூகவலைதளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகும் படமாக சுறா இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பற்றி அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த கொல்லம் நண்பன் பாய்ஸ் என்ற விஜய் ரசிகர் மன்றத்தினர் வரும் ஜனவரி 26ம் தேதி இந்த படத்தை காலை காட்சிக்கு அங்குள்ள ஒரு தியேட்டரில் மறுபடியும் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.  இந்த ரீ ரிலீஸ் விழாவிற்கு கொல்லம் மாவட்ட ஆட்சியரை அழைத்து விழாவை சிறப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

வழக்கமாக நடிகர்கள் நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த படத்தைதான் ரசிகர்கள் மறுபடியும் ரிலீஸ் செய்து பார்ப்பது வழக்கம். ஆனால் கேரள ரசிகர்கள் வினோதமாக விஜய்யின் படுதோல்வி படமான சுறாவில் தேர்ந்தெடுத்திருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

Published by
adminram