விஜய் சேதுபதி மாதிரி இல்ல சூர்யா!.. ஆக்‌ஷன் போட்டு பொளக்குறாரே!.. பீனிக்ஸ் கிளிம்ப்ஸ் வீடியோ!…

Published on: December 3, 2025
fines movie
---Advertisement---

Phoenix: சினிமாவில் வாரிசுகள் நடிக்க வருவது என்பது எப்போதும் நடப்பதுதான். தயாரிப்பாளரின் மகன், இயக்குனரின் மகன், நடிகரின் மகன் என எல்லோருமே நடிக்க வந்துவிடுவார்கள். நடிக்க வரவில்லை எனில் இயக்குனர் ஆகிவிடுவார்கள். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சினிமாவுக்கு வந்துவிட்டார்.

சூர்யா ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த சிந்துபாந்த் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் விஜய் சேதுபதியுடம் படம் முழுக்க வருவது போல அவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது சற்று குண்டாகவே இருந்தார். அந்த படம் வெளியாகி 6 வருடங்கள் ஆனநிலையில் இப்போது ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார்.

அதிலும் பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறார். அவரின் நடிப்பில் பீனிக்ஸ் என்கிற படம் உருவாகியிருக்கிறது. பல படங்களுக்கு சண்டைக் காட்சிகளை அமைத்த அனல் அரசு இந்த படத்தை இயக்கியுள்ளார். குத்துச்சண்டை போட்டியில் ஆர்வம் உள்ள சூர்யா சூழ்நிலை காரணமாக சிறைக்கு போகிறார்.

அதன் சில கேங்ஸ்டர் கும்பல் அவரின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்கள். அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. இந்த படம் வருகிற 4ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, இப்படம் தொடர்பான புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டிருக்கிறது. அதில்தான் விஜய் சேதுபதி மகன் சூர்யா ஓவர் ஆட்டிடிட்யூட் காட்டுகிறார். வாயில் பபிள்கம் மென்றுகொண்டு ஓவர் சீன் போடுகிறார் என்றெல்லாம் ட்ரோல் செய்தார்கள்.

இந்நிலையில், பீனிக்ஸ் பறவை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதில், சிறையில் இருக்கும் சூர்யாவிடம் ஏற்கனவே சிறையில் இருக்கும் சிலர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்கிற காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. மேலும், சூர்யா குத்துச்சண்டை போட்டியில் பங்கு பெறும் காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. கிளிம்ப்ஸ் வீடியோவை பார்க்கும்போது பீனிக்ஸ் திரைப்படம் ரசிகர்களுக்கு பக்கா ஆக்‌ஷன் ட்ரீட்டாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment