ரீவைண்ட்- யாரும் எதிர்பாராமல் ஓடிய சுந்தரபுருஷன்

by adminram |

e057d65910163a0dc8a09f39d6d783e5-2

கடந்த 1996ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி வெளியான படம் சுந்தரபுருஷன். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி செளத்ரி தயாரித்திருந்தார். இயக்குனர் எஸ்.டி சபா இப்படத்தை இயக்கி இருந்தார்.

e057d65910163a0dc8a09f39d6d783e5-1

இப்படம் வந்த காலக்கட்டத்தில் கதாநாயகி ரம்பாவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது முன்னணி நாயகர்களுடன் நடித்து வந்த ரம்பா வில்லன் போன்ற தோற்றங்களில் நடித்து வந்த லிவிங்ஸ்டனுடன் ஜோடியாக நடிக்கிறாரே என அந்நாளைய ரம்பாவின் விழுதுகள் பலருக்கு கவலையாக இருந்தது. ஏனென்றால் உள்ளத்தை அள்ளித்தா மூலம் அறிமுகமாகிய ரம்பா தொடையழகியாக வர்ணிக்கப்பட்டார். அதிக கவர்ச்சி காட்டி நடித்ததாலும் அழகும் சேர்ந்த கதாநாயகி ரம்பா என்பதால் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தது.

11f67f924839d93ce70bc00eb126d0d5

இருப்பினும் முன்னணி நாயகியாக இருந்த ரம்பா, லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாக நடித்தது பலருக்கும் குழப்பமாக இருந்தது. ஆனால் ரம்பா என்ன விவரம் இல்லாதவரா? கதை கேட்டு அந்த கதை வித்தியாசமாக இருந்துள்ளதால் லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாக ரம்பா நடிக்க சம்மதித்துள்ளார். ஏனென்றால் கதை அப்படி.

b9f2741a7b7f67528d8dd85be0937616-1

அழகில்லாத கதாநாயகன்(லிவிங்ஸ்டன்) ஆர்வக்கோளாறில் மாமா மகள் வள்ளியை(ரம்பா) மணம் முடிக்க எண்ணுகிறான் வள்ளி வேறொருவனை காதலித்து மணக்க நினைக்க யாரும் எதிர்பாராத வகையில் அந்த திருமணத்தை தடுத்து அந்த மாப்பிள்ளை மேல் பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி ஜெயிலுக்கு அனுப்புகிறார் லிவிங்ஸ்டன்.

மணக்கோலத்தில் நின்ற கதாநாயகி ரம்பாவுக்கு வேறு மாப்பிள்ளை இல்லாமல் போக லிவிங்ஸ்டன் தான் சரியான மாப்பிள்ளை என முடிவுக்கு வந்து அவரையே மணக்க வைக்கிறார்கள்.

சில நாள் ரம்பா சோகமாக இருந்து விட்டு இயல்பு நிலைக்கு திரும்பி திருமண வாழ்க்கையில் ஈடுபட நினைக்கிறார். ஆனால் நல்லவரான லிவிங்ஸ்டன் ஆர்வக்கோளாறில் தவறு செய்து இன்னொருவனை பிரித்து நாம் திருமணம் செய்து கொண்டோம் என மனசாட்சி உறுத்த தன்னுடைய பெர்சனாலிட்டியும் உறுத்த ரம்பாவுடன் திருமண உறவுகளில் ஈடுபட பயந்துகொண்டே திரிகிறார்.

தாம்பத்ய ரீதியில் உறவுகள் இல்லாமல் போனதால் கதாநாயகி மனம் வாடுகிறார். இறுதியில் தற்கொலைக்கு கதாநாயகன் முயல, அதிலிருந்து கதாநாயகி ரம்பா கதாநாயகன் லிவிங்ஸ்டனை காப்பாற்றி மனதில் உள்ள கூச்சங்களை போக்குகிறார் அவர் செய்த தப்பை புரியவைத்து அவரை குடும்ப வாழ்க்கைக்கு தயாராக்குகிறார்.

இந்த கதையை கலகலப்பாக அருமையாக எழுதியவர் லிவிங்ஸ்டன்.எஸ்.டி சபா அருமையாக இக்கதையை இயக்கி இருப்பார். சிற்பி இசையில் மருத அழகரும் பாடல் மிகவும் புகழ்பெற்றது. மற்ற பாடல்களும் ஓரளவு பேசப்பட்டது.

725738922795a9c4d61350093e8dcd26

வடிவுக்கரசி, வினுச்சக்கரவர்த்தி, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முக்கியமாக படத்தில் வடிவேலுவின் காமெடி கொஞ்சம் பலம் சேர்த்திருந்தது. கோவிலில் வேலை திருடுவது, பூட்டிய வீட்டை உடைத்து திருடும் திருடனாக வடிவேலு கலகலப்பூட்டி இருந்தார்.

சிலருக்கு படத்தின் கதையம்சமும் , படத்தின் தலைப்பும் ஏதோ அஜால் குஜால் படம் மாதிரி உணர வைத்தது. ஆனால் அப்படி இல்லாமல் சிக்கலான தாம்பத்ய உறவு சம்பந்தப்பட்ட கதையை ரொம்ப டீஸண்டாக சொல்லி இருந்தார் இப்பட இயக்குனர் சபா.

யாரும் எதிர்பாராமல் இப்படம் 100 நாட்களை கடந்து ஓடியது குறிப்பிடத்தக்கது.

Next Story