விஜய் உடன் நடித்து செம ஹிட் கொடுத்த ரிச்சா பல்லோட்
ரிச்சா பல்லோட் பார்ப்பதற்கு மொழு மொழுவென்று அமுல்பேபி மாதிரி முக லட்சணமாக அழகாக இருப்பார். இவர் நடித்த படங்களில் சட்டென்று நம் நினைவுக்கு வருவது தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த ஷாஜஹான் தான். அடுத்தது இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் தவப்புதல்வன் மனோஜூடன் இணைந்து நடித்த அல்லி அர்ஜூனாவும தான்.
புகழ்பெற்ற திரைப்பட நடிகையும், மாடல் அழகியுமாக உள்ளவர் ரிச்சா பல்லோட். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1991ல் வெளியான லம்மே என்ற இந்தி படத்தில் நடித்து திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். 2000ல் வெளியான நுவ்வே கவாளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 2001ல் ஷாஜஹான் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார்.
தொடர்ந்து அல்லி அர்ஜூனா, காதல் கிறுக்கன், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், உயிரோடு உயிராக ஆகிய படங்களில் நடித்தார்.
30.08.1980ல் மும்பையில் பிறந்தார் ரிச்சா பல்லோட். அவருக்கு 41வது பிறந்தநாள். யாகாவராயினும் நாகாக்க, நல்வரவு, காதல் கள்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவற்றில் சில படங்களை இங்கு பார்ப்போம்.
ஷாஜஹான்
2001ல் வெளியான இப்படத்தை ரவி இயக்கினார். விஜய், ரிச்சா பல்லோட், விவேக், கோவை சரளா, கிருஷ்ணா, (நட்புக்காக) மீனா, நிழல்கள் ரவி, தேவன், அஜய் ரத்னம் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு மணி சர்மா இசை அமைத்தார். பாடல்கள் அனைத்தும் செம ஹிட் ஆனது.
மெல்லினமே மெல்லினமே, காதல் ஒரு, அச்சச்சோ புன்னகை, மனிதா மனிதா, மின்னலை பிடித்து, மே மாதம், சரக்கு வச்சிருக்கேன் ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன.
அல்லி அர்ஜூனா
2002ல் வெளியான படம். சரண் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்கள் செம ஹிட் ஆனது. மனோஜ், ரிச்சா பல்லோட், ப்ரீத்தா விஜயகுமார், சார்லி, விந்தியா, வினுசக்கரவர்த்தி, நிழல்கள் ரவி, மகாநதி சங்கர், அம்பிகா, பாத்திமா பாபு, ஜெய்கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
சொல்லாயோ சோலைக்கிளி, ரோஜா சொல்லடி, ஒண்ணே ஒண்ணி, ஓசகா மொராயா, எந்தன் நெஞ்சில் ஆகிய பாடல்கள் பட்டையைக் கிளப்பின.
ரிச்சா பல்லோடுக்கு நம்ம டீம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.