3 வயது சிறுமிக்கு வாக்களிக்கும் உரிமை – தெலங்கானாவில் நடந்த குளறுபடி !

தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலுக்கான மாதிரி வாக்காளர் பட்டியலில் 3 வயது சிறுமியின் பெயரும் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை அடுத்து விரைவில் தெலங்கானாவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து மாதிரி வாக்காளர் பட்டியலை தெலங்கானா தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதில் கரீம்நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் 3 வயது மகள் நந்திதாவின் பெயரும் இருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. சிறுமியின் புகைப்படத்தோடு நந்திதா, 35 வயது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அறிந்த குழந்தையின் தந்தை தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார்.

இதையடுத்து அதிகாரிகள் பட்டியலை சரிபார்த்து குழந்தையின் பெயரை நீக்கினர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Published by
adminram