More

சமூக தொற்று எனும் அபாயநிலை…  இந்தியா இன்னும் எட்டவில்லை – மத்திய அரசு உறுதி !

கொரோனா வைரஸ் உலகெங்கும் 4,00,000 லட்சம் பேருக்கு பரவி இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இன்றுவரை 609 ஆக உள்ளது. இதில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேலும் இந்தியாவில் மேலும் பரவாமல் இருக்கும் வண்ணம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதுவரை இந்தியாவில் கொரோனா வெளிநாடு சென்று வந்தவர்கள் மற்றும் அவரோடு நேரடி தொடர்பு கொண்டவர்கள் மூலம் மட்டுமே பரவி உள்ளது. அப்படி இல்லாமல் சமூக தொற்று எனும் மூன்றாம் நிலை மிகவும் கொடூரமானதாகும். இந்தியா அபாயகரமான மூன்றாம் நிலையை இன்னும் எட்டவில்லை என்று மத்திய

 சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் நேற்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து  “இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இதுவரை எந்த சமூக பரவலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளதுஎன தெரிவித்தார்

Published by
adminram