அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களே ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க ரொம்பவே யோசிப்பார்கள். இரண்டு வேடங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்டவேண்டும் என்பது ஒரு பெரிய சவாலான பணி என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஹீரோக்களுக்கு இணையாக யோகிபாபு முதல் முறையாக ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். சித்தார்த் ஹீரோவாக நடித்து வரும் ’டக்கர்’ என்ற படத்தில்தான் அவர் தந்தை மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் இதில் தந்தையின் வயதான கெட்டப் இந்த படத்தில் கலக்கலாக இருக்கும் என்றும் இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் கிரிஷ் என்பவர் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே கப்பல் என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
டக்கர் திரைப்படம் யோகி பாபுவுக்கு மற்றொரு ’கோலமாவு கோகிலா’ படமாக இருக்கும் என்றும் இந்த படத்தில் அவருக்கு பெரும் புகழ் கிடைக்கும் என்றும் இயக்குனர் கார்த்திக் கிரிஷ் கூறியுள்ளார். முதல்முறையாக இரட்டை வேடத்தில் யோகிபாபு நடிப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…