மீண்டும் நயன்தாராவை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: எப்படி தெரியுமா?

Published on: February 13, 2020
---Advertisement---

3f7a9044f69f194a8d8848eb1c488446

கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் சென்னை திரும்பிய பிறகு படக்குழு மீதியுள்ள 10 சதவீதத்தை முடித்து விட்டதாகவும் இதனையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக ஆர்ஜே பாலாஜியே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் படமாக்கப்பட்ட ஒரு சில காட்சிகளை போட்டுப் பார்த்ததில் ஆர்ஜே பாலாஜிக்கு திருப்தி இல்லை என்றும் இதனால் மீண்டும் ஒருசில காட்சிகளை படமாக்க ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது இதனை அடுத்து நயன்தாராவிடம் பேசி மீண்டும் கால்ஷீட் தேதிகளை வாங்கி உள்ளதாகவும் இந்த படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே நயன்தாராவை இயக்கும் வாய்ப்பு மீண்டும் ஆர்ஜே பாலாஜிக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில் ஊர்வசி, மெளலி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Comment