Home > இருட்டு அறையில் முரட்டுக்குத்து 2 - ஹீரோ யார் தெரியுமா?
இருட்டு அறையில் முரட்டுக்குத்து 2 - ஹீரோ யார் தெரியுமா?
by adminram |
ஹரஹரமஹாதேவகி படத்தை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கிய திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. அடல்ட் காமெடி வகையில் உருவான இப்படத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
அடல்ட் காமெடி வகை என்றாலும் நகரங்களில் பெண்களே இப்படத்தை விரும்பி பார்த்தனர். ஆனால், நல்ல சினிமாக்களை விரும்பும் சினிமா விமர்சகள் மற்றும் ரசிகர்கள் இப்படத்தை கழுவி ஊற்றினார். எனினும், வியாபார ரீதியாக இப்படம் நல்ல வசூலை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகவுள்ளது. இப்படத்தில் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமாரே ஹீரோவாக நடிக்க உள்ளார். அனேகமாக இப்படத்திற்கு தலைப்பு ‘இரண்டாவது குத்து’ என வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
அடல்ட் காமெடி படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கு....
Next Story