ரோஹித்தின் அதிரடி – கோலியின் தவறு! 179 ரன்களை வைத்து வெற்றி பெறுமா இந்தியா ?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இன்று மூன்றாவது டி 20 போட்டி ,ஹாமில்டனில் தொடங்க டாஸ் வென்ற நியூசிலாந்து அணி  கேப்டன் வில்லியன்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 5 விக்கெட்  இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 65 ரன்கள் சேர்த்தார். கேப்டன் விராட் கோலி 38 மற்றும் ராகுல் 27 ரன்கள் எடுத்தனர்

பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 69 ரன்களை சேர்த்திருந்தது. அதனால் ஸ்கோர் ஆட்ட முடிவில் 200 க்கும் மேல் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராகுல் விக்கெட் விழுந்ததும் கோலி இறங்காமல் ஷிவம் துபேவை இறக்கினார். அவர் சொதப்ப ரோஹித் ஷர்மா அவசரப்பட்டு விக்கெட்டை இழந்தார். அதே ஓவரின் துபேவும் அவுட் ஆனார். அதன் பின்னர் இந்தியாவால் அதிரடியாக ஆட முடியவில்லை.

இதனால் இந்திய அணியின் ரன்ரேட் 8க்கும் கீழே சென்றது. அந்த ஒரு முடிவாலேயே இந்திய அணியின் ஸ்கோர் குறைந்தது.

Published by
adminram