மலரினும் மெல்லிது காமம்…சிலரதன் செவ்வித் தலைப்படுவர் என்றோர் குறள் உண்டு. காதல் இன்பத்தை எல்லோராலும் உணர முடியாது. ஒரு சிலர் மட்டுமே அதன் முழுமையான இன்பத்தை உணர்ந்து ருசித்துள்ளனர். காதல், காமம் கலந்த படங்கள் தமிழ்சினிமாவில் ரொமான்டிக் மூவி என்றழைக்கப்படுகிறது. இப்படி வெவ்வேறு காலகட்டங்களில் நிறைய படங்கள் வருவதுண்டு. என்றாலும், ஒரு சில படங்களை இங்கு காணலாம்.
தமிழில் காதலால் கவர்ந்திழுக்கக்கூடிய படங்கள் ஏராளமாக வந்துள்ளன.
பருவ ராகம்
1987ல் வெளியான பருவ ராகம் படத்தின் இயக்குனர் வி.ரவிச்சந்திரன். இவர் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரது ஜோடி ஜூஹி சாவ்லா. இவர்களுடன் ஜெய்சங்கர், பூர்ணம் விஸ்வநாதன், டெல்லி கணேஷ், தேங்காய் சீனிவாசன், தியாகு, விஷ்ணுவர்த்தன், சோ., நீலு, பூபதி, தேவகிராணி, ஜெயசித்ரா உள்பட பலர் நடித்துள்ளனர். இசை அமைத்தவர் ஹம்சலேகா.
நெஞ்சத்தைக்கிள்ளாதே
1980ல் வெளியான இப்படம் மகேந்திரன் இயக்கினார். மோகன், சுஹாசினி மற்றும் பலர் நடித்த படம். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். இது ஒரு காதல் படம். படத்தில் பருவமே புதிய பாடல் பாடு என்ற ரொமான்டிக் சாங் வரும். பாடல் அருமையிலும் அருமை. ஹே தென்றலே, உறவெனும், மம்மி பேரு ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
பூவே உன்னை நேசித்தேன், காதல் இல்லை என்று, பாடும் இளம் குயில்களே, ஒரு மின்னல் போலஈ கேளம்மா கேளம்மா, யார் இவனோ இவன், அடியே அம்மா கண்ணு, ஹே மாமா வண்டி, ஒரு ஆணும் பெண்ணும், மோசக்காரனா, சூரப்பத்தா…ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
சொல்லாமலே
சொல்லாமலே சசியின் இயக்கத்தில் 1998ல் வெளிவந்த காதல் தமிழ்த் திரைப்படம். இயக்குநர் சசிக்கு இது முதல் திரைப்படம். நடிகர் லிவிங்ஸ்டனும் நடிகை கௌசல்யாவும் நடித்துள்ளனர். கரண், விவேக் ஆனந்த், பிரகாஷ்ராஜ் ஆகியோர் உடன் நடித்துள்ளனர். படம் பெரும் வெற்றி பெற்றது. தன் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் நாயகனின் கதை. சொல்ல முடியாமல் போனதற்கு என்ன காரணம் என வெண்திரையில் பார்க்கலாம்.
கொலம்பஸ் காதலா, சொல்லாதே, சிந்தாமணியே வா, சொல்லு சொல்லு, ராத்திரிடா ரௌண்டடிடா, சொல்லாதே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாபி இசை அமைத்துள்ளார்.
மயங்குகிறாள் ஒரு மாது
1975ல் வெளியான இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். பஞ்சு அருணாசலம் எழுதிய கதையை விஜய பாஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் படம் வெளியானது. முத்துராமன், சுஜாதா உள்பட பலர் நடித்த படம். இப்படம் காதல் ரசம் சொட்ட சொட்ட எடுத்த படம்.
சொல்லத் துடிக்குது மனசு
1988ல் பி.லெனின் இயக்கத்தில் வெளியான தமிழ்த்திரைப்படம். கார்த்திக், புதுமுகம் பிரியாஸ்ரீ நடித்துள்ளனர். சார்லி, மலேசியா வாசுதேவன், ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். எனது விழி, குயிலுக்கொரு, பூவே செம்பூவே, தேன்மொழி, வாயக்கட்டி வயத்தக்கட்டி ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. படத்தின் திரைக்கதை வெகு நேர்த்தியாக பின்னப்பட்டது. இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஆர்வம் ஊட்டுவதாய் இருந்தது.
இதயத்தைத் திருடாதே
1989ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தமிழ்படம். நாகர்ஜூனா, கிரிஜா, விஜயகுமார், சௌகார் ஜானகி, சில்க் ஸ்மிதா உள்பட பலர் நடித்தனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. இது காதலர்களுக்கு பிடித்தமான படம். படத்தின் காட்சிகள் மனதில் காதல் ஆசையைத் தூண்டும் வகையில் இருக்கும்.
ஓ பிரியா பிரியா, ஜகடா ஜகடா, அம்மணி பாடவே, ஓம் நமஹ, ஓ பாபா லாலி ஆகிய இனிமையான பாடல்கள் நிறைந்தது.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…