முதல்முறையாக ரூட்டை மாற்றும் சந்தானம்!

fe7ec1039c4dd61f171d4a86a31d320a

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்து வந்தவர் சந்தானம். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் படங்கள் நல்ல வெற்றியைப் பெற்று வருகின்றன என்பதும் கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ’ஏ1’ மற்றும் ’தில்லுக்கு துட்டு 2’ ஆகிய இரண்டு படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்தாலும் காமெடி கதையில் மட்டுமே நடித்து வருகிறார் என்பதும், அதனால் அவர் தொடர் வெற்றியை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல் முறையாக சந்தானம் தனது ரூட்டை மாற்றி உள்ளார்

’ஏ1’ இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் நடிக்கும் சந்தானம் இந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்து தனது ரூட்டை முதல்முறையாக மாற்றுகிறார். இது ஒரு வடசென்னையை மையமாக கொண்ட கேங்க்ஸ்டர் படம் என்றும் அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் போலவே கேங்ஸ்டர் கதையில் ஆக்சன் அவதாரம் எடுக்கும் சந்தானத்தின் புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Related Articles
Next Story
Share it