யுடியூப்பில் ஒரே நாளில் 2 மாபெரும் சாதனை - தனுஷ அடிச்சிக்க ஆளே இல்ல...

d2c23af349b29e46aed6ed6c2389c085

தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராக வளர்ந்து நிற்பவர் நடிகர் தனுஷ். யுடியூப்பில் இவரும், அனிருத்தும் இணைந்து உருவாக்கி வெளியிட்ட ‘ஒய் திஸ் கொல வெரி’ பாடல் வீடியோ உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதேபோல், மாரி 2 படத்தில் சாய் பல்லவியுடன் இணைந்து தனுஷ் நடனமாடிய ‘ரவுடி பேபி’ பாடல் வீடியோவும் தொடர்ந்து யுடியூப்பில் சாதனைகளை செய்து வருகிறது. தற்போது வரை 100 கோடிக்கும் மேலானோர் இந்த பாடல் வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

இந்த செய்தியை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள தனுஷ் ‘ தற்செயலாக நடந்ததா எனத்தெரியவில்லை. ரவுடி பேபி 1 பில்லியன் பார்வையாளர். அதேநேரம், ஒய் திஸ் கொலவெறி பாடல் வெளியாகி சரியாக 9 வருடம் என இரண்டும் ஒரேநாளில் நடந்துள்ளது. தென்னிந்திய பாடலில் ரவுடி பேபி பாடல் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

Related Articles
Next Story
Share it