ப்ப்பா!...பாகுபலியை விட 10 மடங்கு!.. ஆர்.ஆர்.ஆர். மேக்கிங் வீடியோ
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமனா, சத்தியராஜ், ராணா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து பிரம்மாண்டமாக உருவாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் பாகுபலி. 2 பாகங்களாக வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல வசூலை வாரி குவித்தது.
இப்படத்திற்கு ஆர்.ஆர்.ஆர். என்கிற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவகன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இந்த திரைப்படம் அக்டோபர் 13ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.பாகுபலியை போலவே பல கோடி செலவில் இந்த திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.