
பாகுபலி படத்திற்கு பின் ஆர்.ஆர்.ஆர். என்கிற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவகன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இந்த திரைப்படம் அக்டோபர் 13ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. பாகுபலியை போலவே பல கோடி செலவில் இந்த திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைத்துள்ளார்.
இப்படம் சுதந்திரத்திற்காக வெள்ளைக்காரர்களை எதிர்த்து போராடிய 2 நண்பர்களின் கதையாகும். எனவே, இப்படத்தில் நட்பை பெருமையாக பேசும் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. இப்படம் 5 மொழிகளில் உருவாகி வருவதால் 5 மொழிகளிலிலும் வெவ்வேறு பாடகர்கள் பாடியுள்ளனர். தமிழில் இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். அதோடு, அந்த பாடலை ஆல்பம் வீடியோ போல் படமாகியுள்ளனர். இதில், அனிருத் உள்ளிட்ட மற்ற பாடகர்கள் மற்றும் கீரவாணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதோடு, பாடலில் இறுதியில் ராம்சரண், ஜீனியர் என்.டி.ஆர். ஆகியோரும் வருகின்றனர். ஆகஸ்டு 1ம் தேதி நண்பர்கள் தினம் என்பதால் அந்த பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.





