ரூ.250 கோடி மதிப்பில் சென்னை விமான நிலையத்தில் தியேட்டர்கள்!

Published on: January 22, 2020
---Advertisement---

44354ff454e8e3b5d0ed26007bc4f1a4

இந்தியா முழுவதும் பிவிஆர் சினிமாஸ் சுமார் 170 இடங்களில் 800 திரையரங்குகளை நடத்தி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை விமான நிலையம் அருகே ரூபாய் 250 கோடி மதிப்பில் ஐந்து  பிரம்மாண்டமான தியேட்டர்களை பிவிஆர் நிறுவனம் தற்போது கட்டி வருகிறது

இந்த வளாகத்தில் திரையரங்கில் மட்டுமன்றி பிரம்மாண்டமான பார்க்கிங் நிலையம் அமைக்கப்பட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்தில் விமானத்திற்கான காத்திருக்கும் பயணிகளின் வசதியை முன்னிட்டும், சென்னை மக்களின் திரையரங்கு தேவையை முன்னிட்டு இந்த திரையரங்குகள் கட்டுப்படுவதாக தெரிகிறது.

அதோடு சென்னை விமான நிலையத்தில் மிகப்பெரிய பார்க்கிங் இடம் இருந்தாலும் சில நேரங்களில் பார்க்கிங் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனை கணக்கில் கொண்டு மல்டி லெவல் கார் பார்க்கிங் காம்ப்ளக்ஸ் ஒன்றையும் பிவிஆர் கட்டி வருகிறது திரையரங்குகள் இந்த ஆண்டும் பார்க்கிங் காம்ப்ளக்ஸ் அடுத்த ஆண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment