ரூ.8 கோடி விலையுடைய நாய் காணவில்லை; துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம்

பெங்களூரை சேர்ந்த சேதன் என்பவர் அனுமந்த நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தனது நாயை காணவில்லை எனக் கூறியிருந்தார். அது ஒரு சாதாரண நாய் என கருதிய போலீசார் அதன் விலையை கேட்டு அதிர்ந்து போனார்கள். 

அந்த நாய் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலஸ்கான் மலமியூட் வகையை சேர்ந்த நாய் எனவும், அதன் விலை ரூ.8 கோடி எனவும் தெரிவித்தார். மேலும், தனது நாயை யாராவது கண்டுபிடித்து கொடுத்தால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாய் திருடர் ஒருவர் தனது நாயை திருடிச்சென்றுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

Published by
adminram