ரூ.2.5 கோடி பென்ஸ் காரை தூக்கி வீசிய நபர் - அதிர்ச்சி வீடியோ

by adminram |

0260ee96edf4e227528bdbb64aa3ffc5-2

சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. இதில், பென்ஸ் கார்கள் அதிகம் விலை உயர்ந்தவை. பெரும் பணக்காரர்கள் மட்டுமே அந்த காரை வாங்கமுடியும்.

இந்நிலையில் ரூ.2.5 கோடி மதிப்புடைய காரை ஒரு வாலிபர் கீழே போட்டு உடைத்துள்ளார்.

இந்த சம்பவம் இந்தியாவில் நடிக்கவில்லை. ரஷ்யாவில் நடந்துள்ளது. இகோர் மோரஸ் என்ற வாலிபர் மெரிசிடிஸ் ஏஎம்ஜி ஜி63 (Mercedes AMG G63) காரை கடந்த மார்ச் மாதம் ரூ.2.25 கோடி விலை கொடுத்து வாங்கினார். இந்த காரை வாங்க வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் கனவாக இருந்தது.

ஆனால், காரை வாங்கி பின் அதில் ஏற்பட்ட கோளாறுகளை அவரால் சரி செய்ய முடியவில்லை. வாரண்டி காலம் இருந்தும் சில பழுதுகளை நிர்வாகம் சரி செய்து கொடுக்கவில்லை எனத்தெரிகிறது. இதனால், ஒரு கட்டத்தில் வெறுப்படைந்த அவர் அந்த காரை உடைத்து விடுவது என முடிவெடுத்தார்.

இதற்காக ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து, காரை மேலே தூக்கி கீழே வீசுவதை வீடியோ எடுத்துள்ளார். இவரின் யுடியூப் சேனலில் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story