அன்புச்செழியன் வீட்டில் ரூ.65 கோடி பறிமுதல் – வருமான வரித்துறையினர் அதிரடி

நேற்று நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதேபோல், அவரின் பண்ணை வீடு, சாலிகிராமம் வீடு அனைத்திலும் தற்போது வரை சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், பிகில் பட தயாரிப்பாளர் ஏஜிஎஸ் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அதேபோல், பிரபல சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை வீடு மற்றும் அலுவலகம், மதுரை வீடு ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்றது. தற்போது சென்னையில் உள்ள வீட்டில் ரூ.50 கோடியும், மதுரையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் ரூ.15 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Published by
adminram