ஆர்.எஸ்.எஸ் மூஸ்லீம்களுக்கு எதிரானது ! பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சைக் கருத்து – நீதிமன்றம் உத்தரவு

10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பற்றி தெரிவித்திருந்த கருத்தை உடனடியாக நீக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 ஆம் வகுப்புக்கான சமூக அறிவியல் இரண்டாம் பருவ பாடப் புத்தகத்தில் பக்கம் இந்து முஸ்லீம் பற்றி வரும் பகுதி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சுதந்திரத்துக்கு முன்னர் எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை நீக்கவேண்டும் எனவும் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சென்னை மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ’உடனடியாக சம்மந்தப்பட்ட பகுதியை நீக்கவேண்டும். மேலும் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஸ்டிக்கர் ஒட்டி அதை மறைக்கவேண்டும். ’ எனக் கூறியுள்ளார்.

Published by
adminram