நீ மட்டும் சினிமாவிற்கு வந்திருந்தா நடிகைகள் பயந்திருப்பாருங்க.. உதயகுமார் சொன்ன அந்த நடிகை

by ராம் சுதன் |
நீ மட்டும் சினிமாவிற்கு வந்திருந்தா நடிகைகள் பயந்திருப்பாருங்க.. உதயகுமார் சொன்ன அந்த நடிகை
X

தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் படம் என்ற வகையில் பல படங்களை நாம் குறிப்பிடலாம். அதில் பெரும்பாலான படங்களை இயக்கியவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் இயக்குனர் ஆர் வி உதயகுமார். ரஜினியிலிருந்து கார்த்திக் வரை 80, 90களில் முன்னணி நடிகர்களாக இருந்த நடிகர்களை வைத்து பல கிளாசிக் படங்களை கொடுத்திருக்கிறார்.

அதுவும் அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி படங்களாக அமைந்தவை. சின்ன கவுண்டர், பொன்னுமணி, எஜமான், சிங்காரவேலன், கிழக்கு வாசல், நந்தவனத் தேரு, சுபாஷ் ,உறுதிமொழி என அடுக்கிக் கொண்டே போகலாம். அதிலும் குறிப்பாக சின்ன கவுண்டர் ,எஜமான் ,சிங்காரவேலன் போன்ற படங்கள் ஆர் வி உதயகுமார் கேரியரில் தி பெஸ்ட் திரைப்படங்களாக அமைந்தவை.

தற்போது அவர் படங்களை இயக்காத நிலையில் ஒவ்வொரு பட விழாவிலும் பங்கேற்று அவருடைய அனுபவங்களை கூறுவது வழக்கம். இந்த நிலையில் இன்று பிரபல சின்னத்திரை நடிகை ரட்சிதா நடிக்கும் எக்ஸ்ட்ரீம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியிருந்தார் ஆர்வி உதயக்குமார். அப்போது ரட்சிதாவை பார்த்து ‘அழகான முகம்.சிறப்பான நடிப்பு. ஆனால் வெள்ளி திரையில் வராமல் போய் விட்டீர்கள்.

சின்னத்திரையிலேயே பயணித்து விட்டீர்கள். வெள்ளித் துறையில் மட்டும் நுழைந்திருந்தால் இன்று நிறைய நடிகைகள் உங்களைப் பார்த்து பயந்து இருப்பார்கள்’ என அவரை பெருமைப்படுத்தும் விதமாக கூறியிருந்தார் ஆர்வி உதயக்குமார். ரட்சிதாவை பொருத்தவரைக்கும் சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களில் குடிபோனவர் .

தொடர்ந்து சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்ற அளவுக்கு புகழ் பெற்றவர். இடையில் அவருடைய திருமணம் மற்றும் விவாகரத்து இதன் காரணங்களால் மீடியாக்களில் அவரை பார்க்க முடியாமல் போனது .அதன் பிறகு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய என்ட்ரி கொடுத்து மீண்டும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் ரட்சிதா.

பிக்பாஸுக்கு பிறகு படங்களில் நடித்து வந்த ரட்சிதா சொல்லும் அளவிற்கு எந்த படங்களும் அவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை. அதன் பிறகு இந்த எக்ஸ்ட்ரீம் திரைப்படத்தில் போலீஸ் கெட்டப்பில் வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது .அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தான் ஆர்வி உதயகுமார் இந்த அளவு பேசியிருந்தார்.

Next Story