சென்னை பூந்தமல்லியில் நடக்க முடியாத தனது மாமியாரை தூக்கி வந்து வாக்களிக்க செய்துள்ளார் பாண்டியம்மாள் எனும் மருமகள்.
தமிழகமெங்கும் நேற்று முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் சுவாரஸ்யமான சம்பவங்கள் பல நடந்தன. அவற்றில் ஒன்றாக தனது மாமியாரை கையில் தூக்கி வந்து வாக்களிக்க செய்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னை பூந்தமல்லி ஊராட்சிக்கு உட்பட்ட சென்னீர்குப்பம் எனும் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். இவருக்கு 87 வயது ஆகிறது. கண் பார்வை குறைபாட்டாலும் நடைப் பிரச்சனையாலும் பாதிக்கப்பட்ட இவர் தேர்தலில் வாக்களிக்க மிகவும் ஆசைப்பட்டுள்ளார். இதை தன் மருமகள் பாண்டியம்மாளிடம் தெரிவிக்க வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அந்த வாக்குச்சாவடியில் சக்கர நாற்காலி இல்லாததால் வாக்குச்சாவ்டியின் உள்ளே அவரைத் தூக்கிச் சென்று வாக்களிக்க வைத்துள்ளார். இந்த சம்பவம் அந்த வாக்குச்சாவடியில் உள்ள அனைவரையும் நெகிழ வைத்தது.
சினிமாவில் நடிக்க…
பழம்பெரும் நடிகை…
1960 காலகட்டங்களில்…
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…