
நியுசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் 19 வயதுக்குட்பட்டோருக்கான காலிறுதிப் போட்டியில் நடந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை நியூஸிலாந்து அணி நேற்று காலிறுதியில் வீழ்த்தியது. இந்த போட்டியில் நடந்த மற்றொரு விஷயம் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்திழுத்துள்ளது.
இந்த போட்டியின் இடையில் சதைப்பிடிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட மே.இ.தீவுகள் வீரரான மெக்கன்சியை நியுசிலாந்து வீரர்கள் ஜெஸி டேஷ்காஃப் என்பவரும், ஜோசப் பீல்டும் பெவிலியன் வரை தூக்கிச் சென்று அனைவரையும் நெகிழவைத்தனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆக, இதனால்தான் கிரிக்கெட்டை ஜெண்டில்மேன்களின் விளையாட்டு எனக் கூறுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.