பாலாவுக்கு எதிராக டைட்டில் வைத்த எஸ்.ஏ.சி..... உள்குத்து ஏதும் இருக்கா?....
தமிழ் சினிமாவில் புரட்சிகர கருத்துக்களை பேசி வருபவர் இயக்குனர் சமுத்திரக்கனி. இவரின் திரைப்படங்களில் ஊழல், இன்றைய கல்வி நிலை, லஞ்சம், சமுதாய ஏற்றத்தாழ்வுகள், சாதி என அனைத்தும் பேசப்படும். வசனங்கள் அனல் தெறிக்கும். அறிவுரை சொல்லும் கதாபாத்திரம் என்றாலே இயக்குனர்கள் சமுத்திரக்கனியைத்தான் தேடுகிறார்கள்.

சிறந்த இயக்குனராக மட்டுமில்லாமல் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அவர் மாறியுள்ளார். அதோடு, தெலுங்கு சினிமாவில் வில்லானகவும் அவர் அசத்தி வருகிறார். பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டார். பாகுபலி புகழ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.. அப்படத்திற்கு ‘நான் கடவுள் இல்லை’ என தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தை விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் மிரட்டல் வில்லனாக சரவணன் நடித்துள்ளார்.

பாலா ‘நான் கடவுள்’ என தலைப்பு வைத்து படம் எடுத்தார். எஸ்.ஏ.சி. ‘நான் கடவுள் இல்லை’ என்கிற தலைப்பில் சமுத்திரக்கனியை வைத்து ஒரு படம் இயக்கியுள்ளார். இதுலே ஏதுவும் உள்குத்து இருக்கா என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.