சாமி நாதனை எஸ்.ஏ.சி திட்டினாரா? உண்மையில் என்னதான் நடந்தது? பிரபலம் சொன்ன தகவல்

லொள்ளு சபா? : விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று லொள்ளு சபா நிகழ்ச்சி. சினிமாவில் மிகவும் பிரபலமான படங்களை ரிகிரியேட் செய்து அதை காமெடியாக தந்து மக்களை சிரிக்க வைப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கியமான நோக்கம். முதலில் சந்தானம் ,யோகிபாபு இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார்கள். இவர்கள் சினிமாவிற்கு வந்த பிறகு அந்த நிகழ்ச்சியை நல்ல முறையில் கொண்டு செலுத்தியவர் நடிகர் சாமி நாதன்.
புகழ்பெற்ற காமெடி: அவர் படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சந்தானம் நடித்த பெரும்பாலான படங்களில் சாமி நாதன் நடித்திருப்பார். அதில் சந்தானம், சாமி நாதன் சேர்ந்து நடித்த ‘தொட்டுப்பார்த்தேன். ஒரே பிசு பிசுனு இருந்துச்சு’ காமெடி இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிற காமெடி காட்சி. இந்த நிலையில் சமீபத்தில் சாமி நாதன் விஜயை பற்றியும் அவருடைய தந்தை சந்திரசேகர் பற்றியும் பேசிய ஒரு வீடியோ வைரலானது.
அதாவது விஜய் நடித்த போக்கிரி படத்தை பேக்கிரி என்ற பெயரில் ரி கிரியேட் செய்து லொள்ளு சபாவில் கலாய்த்ததை அறிந்த விஜய் மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னை மிரட்டியதாக சாமி நாதன் கூறியிருந்தார். இதை பற்றி பிரபல மூத்த பத்திரிக்கையாளர் சேகுவரா அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு. அப்படி பொழுதுபோக்காக இருக்கும் சில காட்சிகளை எடுத்து முழு படத்தையும் எடுக்காமல் சில காட்சிகளை மட்டும் எடுத்து ஒரு நகைச்சுவையாக சித்தரிக்கிறது என்பது அது ஒரு வகையான சினிமா சுதந்திரம். அதை லொள்ளு சபா சிறப்பாக செய்து இருக்கிறார்கள். அந்த மாதிரி சினிமா சுதந்திரத்தை எஸ் ஏ சந்திரசேகர் கெடுத்ததாக சாமிநாதன் சொன்னது ஆச்சரியமாக இருக்கிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அதுவும் எஸ் ஏ சந்திரசேகரே போன் செய்து மிரட்டியதாக அவர் சொல்லி இருக்கிறார்.
எஸ் எஸ் சி ஐ பொறுத்த வரைக்கும் கடந்த காலங்களில் இது வழக்கமான விஷயமாகத்தான் பார்க்கப்பட்டது. தன் மகனுக்காக பலரையும் அவர் திசை திருப்பி இருக்கிறார். இதெல்லாம் சினிமா வட்டாரத்தில் அப்போதிலிருந்தே பேசப்பட்டது. போக்கிரி என்ற படத்தை பேக்கரி என்ற பெயரில் எடுத்தது மட்டுமல்லாமல் நிறைய படங்களை ஏன் தேவர் மகன் படத்தையும் செய்து இருக்கிறார்கள். விஜய் படம் மட்டுமே கிடையாது. சிவாஜி படத்தையும் பண்ணி இருக்கிறார்கள் .ஆனால் இந்த மாதிரி யாரும் மிரட்டியதாக இதுவரை தகவல் இல்லை.
சாமிநாதன் சொல்லும் போது கூட தேவர்மகன் படத்தை எல்லாம் நாங்கள் எடுத்து இருக்கிறோம் .அதை யாரும் சொல்லவில்லை. போக்கிரி படத்தை மட்டும் எடுக்கும் பொழுது எஸ்ஏ சந்திரசேகர் மிரட்டியதாக சொல்லி இருந்தார். அந்த அளவுக்கு விஜயின் பிராண்டை காப்பாற்றுவதற்கு மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் என்று தெரிகிறது. பல இளம் நடிகர்களை வளர விடாமல் தடுத்த குற்றச்சாட்டுகள் எல்லாம் இருக்கிறது.
அப்படி இருக்கும் பொழுது தன் மகனுக்காக நிறைய சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என பல வேலைகள் செய்திருக்கிறார் என தெரிகிறது. இது சாமிநாதன் சொல்லும் பொழுது உறுதிப்படுத்துவதாக தெரிகிறது. இதிலிருந்து எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் விஜய் வளர்ச்சிக்காக பல நடிகர்கள் வீழ்ந்து இருக்கிறார்கள், வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் அஜித் எந்த அளவு கஷ்டப்பட்டு இருப்பார் என இப்போது தெரிகிறது என கூறி இருக்கிறார்.