இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு சதங்களை முச்சதமாக மாற்றத் தெரியவில்லை என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் மற்றும் கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்களை எடுத்து டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஆனால் டெஸ்ட் போட்டிகளில் எவ்வளவோ சாதனைகளை நிகழ்த்தி இருந்தும் இதுவரை ஒரு முச்சதம் கூட அடித்ததில்லை. இதுகுறித்து சமீபத்தில் நடந்த ஒரு கலந்துரையாடலில் கபில் தேவ் ‘சச்சினுக்கு சதங்கள் எப்படி எடுப்பது என்பதைப் பற்றி தெரிந்திருக்கிறது. ஆனால் கருணையற்றவராக மாறி எப்படி அதை இரட்டை சதமாக மாற்றுவது என்றோ அல்லது முச்சதமாக மாற்றுவது என்றோ அவருக்கு தெரியவில்லை. எந்த பவுலராக இருந்தாலும் ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடிக்கக் கூடிய திறமை இருக்கும் அவர் 10 இரட்டைச் சதங்களாவது அடித்திருக்க வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.
தமிழில் ஐயா…
Mari selvaraj:…
Kanguva: கங்குவா…
அறிந்தும் அறியாமலும்,…
ரஜினியின் பிறந்தநாளை…