Categories: latest news rajinikanth sai abhayankar thalaivar173

Thalaivar 173: தலைவர் 173 படத்திற்கு இசை அவரா?… ரஜினிக்கு என்னாச்சி?..

கூலி படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவிருக்கிறது. எனவே அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் ரஜினி. ரஜினி அடுத்து நடிக்கப் போவது அவரின் 173-வது திரைப்படமாகும். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஏற்கனவே இந்த படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதன்பின் அந்த படத்திலிருந்து அவர் வெளியேறினார். எனவே வேறு இயக்குனரை தேடி வந்தார்கள். பல இயக்குனர்களிடமும் ரஜினி கதை கேட்டார். அதில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை அவருக்கு பிடித்திருந்ததால் அவரையே இயக்குனராக தேர்ந்தெடுக்கிறார்கள் என்கிறார்கள். இதுபற்றிய அறிவிப்பு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என்கிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார் என்கிற செய்தி தற்போது கசிந்திருக்கிறது. கடந்த பல வருடங்களாகவே ரஜினியின் படங்களுக்கு அனிருத் மட்டுமே இசையமைத்து வந்தார். அப்படி இருக்கும்போது பெரிய அனுபவம் இல்லாத, சாய் அபயங்கரை எப்படி ரஜினி படத்துக்கு இசையமைப்பார்? இதை எப்படி ரஜினி அனுமதித்தார்? என்பது தெரியவில்லை.

இன்னும் சொல்லப் போனால் சாய் அபயங்கர் இசையில் டியூட் படம் மட்டும்தான் வெளியாகியிருக்கிறது. அப்படியிருக்க அவருக்கு எப்படி ரஜினி பட வாய்ப்பு கிடைத்தது என்பது தெரியவில்லை.
ஒருவேளை அனிருத்திடம் அவர் வேலை செய்தார் என்பதால் இந்த முடிவா? அல்லது இது இயக்குனரின் விருப்பமா? என்பது தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இது உண்மையா என்பது டிசம்பர் 12ம் தேதி தெரிந்துவிடும்.

Published by
ராம் சுதன்