ஒரு முறை திருமணத்திற்கு ரெடியான சாய்பல்லவி.. ஆனா? நடக்காமல் போனதுக்கு இதுதான் காரணமா?
நம்பர் ஒன் நடிகை: தெலுங்கு சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழிலும் இப்போது நம்பர் ஒன் நடிகையாகவும் அனைவருக்கும் பிடித்தமான நடிகையுமாக மாறியிருப்பவர் நடிகை சாய்பல்லவி. தெலுங்கில்தான் இவருக்கு மார்கெட் அதிகம். ஆனால் அமரன் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாகவே மாறிவிட்டார் சாய்பல்லவி. அளவான சிரிப்பு, பெண்களுக்கே உரிய நளினம், பந்தா இல்லாத பேச்சு என கிட்டத்தட்ட தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் எப்படி இருக்க வேண்டும் என ஒரு ஆண் நினைக்கிறானோ அத்தனை அம்சங்களும் பொருந்திய பெண்ணாக இருப்பவர் சாய்பல்லவி.
அனைவருக்கும் பிடித்தமானவர்: பக்கத்துவீட்டு பெண் போன்ற தோற்றம். இதுவே பலரது ஈர்ப்புக்கு காரணம். இவருக்கு சுத்தமாக பிடிக்காதது மேக்கப். சூட்டிங்கிலும் மேக்கப் போடவே மாட்டாராம். பிரேமம் படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் சாய்பல்லவி. மலர் டீச்சராக தெலுங்கில் ஒரு தமிழ் கல்லூரி பேராசிரியராக நடித்து முதல் படத்திலேயே மிகவும் பிரபலமானார். எப்போதுமே தலைமுடியை விரித்துதான் போடுவார்.
முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்: அதுவே அவருக்கு பிளஸாக அமைந்தது பிரேமம் படத்தில். அதன் பிறகு தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராகவே மாறிவிட்டார். தமிழில் சொல்லும்படியான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதற்கு காரணம் தன்னுடைய கதாபாத்திரம் வெறுமனே ஹீரோக்களுக்கு ஜோடியாக இருக்கக் கூடாது. தனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் சாய்பல்லவி.
அமரன்: அப்படித்தான் தமிழில் அவர் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். படத்திற்கு என்ன மாதிரியான ஆக்டிங் வேண்டுமோ அது சாய்பல்லவியிடமிருந்து சரியாக கிடைத்துவிடும். அமரன் திரைப்படத்தில் அப்படியொரு ஆக்டிங்கைத்தான் வழங்கினார். இந்த நிலையில் தேசிய விருது பெறுவது குறித்து சாய்பல்லவி கூறிய ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தேசிய விருது: அதாவது தேசிய விருது பெற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஒரு முறை என் பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் போக என்னிடம் அவருடைய ஒரு பட்டுப்புடவையை கொடுத்து உன் திருமணத்திற்கு கட்டிக் கொள் என்று கொடுத்தார். அதிலிருந்தே திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். அந்த நேரத்தில்தான் பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் என்றாவது ஒரு பெரிய விழாவிற்கு இந்த புடவையை கட்டிக் கொண்டு போக வேண்டும் என நினைத்தேன்.
அதனால் நான் எப்போது தேசிய விருதை வாங்குறேனோ அப்போதுதான் இந்த புடவையை கட்ட வேண்டும் என நினைத்திருக்கிறேன் என சாய்பல்லவி அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.