swiss ball exercises’ல் பிரம்மிப்பூட்டும் சாக்ஷி அகர்வால்!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.
மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.
கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் swiss ball கொண்டு ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் சிலர் பேசாம இந்த நடிக்குற வேலைய எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு ஒரு ஜிம் ஆரம்பிச்சுடுங்க நல்லா பிழைக்கலாம் என கூறி வருகின்றனர்.