Categories: Cinema News latest news

முருகதாஸ் செஞ்ச வேலை.. ‘மதராஸி’ படத்தை மறைமுகமாக கிண்டலடித்த சல்மான்

சல்மான்கான் தற்போது  முருகதாஸ் குறித்தும் அவர் இயக்கிய சிக்கந்தர் படம் குறித்தும் ஹிந்தி பிக்பாஸில்  பேசியிருப்பது வைரலாகி வருகின்றது. ஹிந்தியில் 19வது சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். அப்போது காமெடி நடிகர் ரவி குப்தா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது ‘ நீங்கள் நடித்த படங்களில் ஏதாவது படத்தை நினைத்து வருத்தப்பட்டதுண்டா?’ என கேள்வியை கேட்டார்.

அதற்கு சல்மான்கான் இரண்டு படங்களின் பெயர்களை கூறினார். ஆனால் மக்கள் நான் கண்டிப்பாக சிக்கந்தர் படம் கூறுவேன் என எதிர்பார்ப்பார்கள் என்று சல்மான் கூறினார். ஆனால் சிக்கந்தர் படத்தை பொறுத்தவரைக்கும் நல்ல கதைக்களம் வாய்ந்த படம்தான் சிக்கந்தர் என கூறி முருகதாஸ் பற்றியும் பேசியிருந்தார். முருகதாஸை பொறுத்தவரைக்கும் தமிழில் தொடர் தோல்விகளை கொடுத்து வந்த நேரம்.

அப்போது ஹிந்தியில் சல்மான் கானை வைத்து பெரிய பட்ஜெட்டில் சிக்கந்தர் படத்தை எடுத்தார். பெரிய எதிர்பார்ப்பில் அந்த படம் இருந்தது. ஆனால் சல்மான்கான் கெரியரில் அந்தப் படம் மோசமான வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூலிலும் படம் தோல்வியை சந்தித்தது. சல்மான்கான் ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. ஏன் முருகதாஸ் மீதும் சல்மான்கான் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

அந்தப் படம் தோல்விக்கு சல்மான்கான் செட்டுக்கு தாமதமாக வந்ததுதான் காரணம் என்றும் சல்மான்கான் மீது முருகதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு தற்போது சல்மான்கான் பதிலடி கொடுத்திருக்கிறார். ஹிந்தி பிக்பாஸை தொகுத்து வழங்கி வரும் சல்மான்கான் நேற்றைய நடந்த எபிசோடில் இது பற்றி பேசியிருக்கிறார். நான் சிக்கந்தர் படப்பிடிப்பின் போது செட்டுக்கு இரவு 9 மணிக்குத்தான் வந்தேன்.

அதுதான் அவருக்கு பிரச்சினையாக இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு விலா எலும்புகள் முறிந்திருந்தன. இதைப் பற்றித்தான் நம்ம டைரக்டர் சார் சொல்லியிருந்தார். தற்போது அவருடைய படம் (மதராஸி) ரிலீஸானது. அதில் ஹீரோ மாலை 6 மணிக்கு எல்லாம் வந்துவிடுகிறார். படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. பட்ஜெட்டில் சிக்கந்தர் படம் பெரியது. இதை விட மதராஸி படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் என்று சல்மான்கான் கிண்டலாக பேசியிருக்கிறார். 

Published by
ராம் சுதன்