நெருங்கிய தோழியுடன் வெறித்தனமா Deadlift தூக்கும் சமந்தா!

by adminram |

885b322ed7783d27915c04547ba797e0

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நெருங்கிய தோழி ஷில்பா ஷெட்டியுடன் இணைந்து வெறித்தனமாக Deadlift தூக்கி ஒர்க்அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்ளின் பாராட்டுக்களை பெற்று லைக்ஸ் அளியுள்ளார். கடந்த சில நாட்களாகவே சமந்தா தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கியுள்ளார். இதற்கெல்லாம் கணவரின் அறிவுரை தான் காரணம் என அவர் முன்னரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story