திருமண கோலத்தில் சமந்தா... திடீரென வைரலாகும் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவை பிறந்த வீடாகவும் தெலுங்கு சினிமாவை புகுந்த வீடாகவும் கொண்டிருக்கும் சமந்தா அவ்விரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார். நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு நாகார்ஜூனா வீட்டு மருமகளான சமந்தா தொடர்ந்து கேப் விடாமல் படங்களில் நடித்து வந்தார்.
திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகியும் சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ளாமல் நடித்து வந்தார். இதற்கிடையில் கடைசியாக அவரது நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் தொடரில் மோசமான காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்ததால் மாமனார் வீட்டில் பிரச்சனை வெடித்து ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே வெளியேறிவிட்டாராம் சமந்தா. தற்போது மும்பை சென்று செட்டில் ஆகப்போவதாக செய்திகள் வெளிவந்தது.
இப்படியான நேரத்தில் திருமண கோலத்தில் இருக்கும் சமந்தாவின் புகைப்படங்கள் சமுகவலைத்தளங்களில் மிகப்பெரும் அளவிற்கு வைரலாகி வருகிறது. இது வெறும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தான் என்றாலும் கணவரை பிரிந்த நேரத்தில் திருமண கோலத்தில் இருக்கும் இந்த போட்டோ பலரது பார்வையை திருப்பியுள்ளது.