நடிகர் மாதவன் சுமார் 50 வயது ஆன சீனியர் நடிகராக இருந்து வரும் நிலையில் அவருடன் இளம் நடிகை சமந்தா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வருவது ஒரு திரைப்படத்தில் அல்ல. அது ஒரு விளம்பரப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது
மாதவன் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் ராஜா, ராணி வேடத்தில் ஒரு பிரபல டீ நிறுவனத்தின் விளம்பர படத்தில் தற்போது நடித்து வருகிறார்கள். இந்த விளம்பர படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த புகைப்படங்களை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் மாதவனுக்கு பொருத்தமான ஜோடியாக சமந்தா இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விளம்பர படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த விளம்பரப்படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…