
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான பின்பும் வழக்கம் போல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இதில், நயன்தாராவும் நடித்து வருகிறார்.

அதேபோல், The family man சீசன் 2 எனும் வெப்சீரியஸ் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. ஆனால், இப்படம் விடுதலை புலிகளை இழிவுபடுத்துவதாக கூறி சீமான், வைகோ போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுவாக எழுந்தது. ஆனாலும், இப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக படுக்கயறை காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.





