Categories: latest news

Samantha Marriage: எளிமையாக நடந்த சமந்தாவின் திருமணம்! வெளியான புகைப்படங்கள்

Samantha Marriage:

தற்போது சமந்தா மற்றும் இந்தி பட இயக்குனர் ராஜு நிடிமொருவை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதை சமந்தாவே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். சமந்தாவை வைத்து தி ஃபேமிலி மேன் மற்றும் சிட்டாடல் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கியவர் ராஜு நிடிமொரு. அதிலிருந்தே சமந்தாவிற்கும் ராஜூவுக்கும் இடையே நட்பு ஆரம்பித்தது.

 அடிக்கடி இருவரும் வெளியில் ஒன்றாக சுற்றுவது பல விழாக்களில் கலந்து கொள்வது என தொடர்ந்து சமந்தா ராஜு நிடிமொரு இருக்கும் மாதிரியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. அப்போதிலிருந்தே இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆரம்பத்தில் அதை சமந்தா மறுத்து வந்தார். 

ஆனால் இன்று ராஜூ நிடிமொருவை சமந்தா கரம் பிடித்திருக்கிறார். கோயம்புத்தூரில் இவர்களுடைய திருமணம் மிக எளிமையாக நடைபெற்று இருக்கிறது. இவர்களுடைய திருமணத்திற்கு திரை பிரபலங்கள் யாரும் கலந்து கொண்டதாக தெரியவில்லை.

அந்த புகைப்படத்தில் சமந்தாவும் ராஜூவும் மட்டுமே இருக்கிறார்கள். உறவினர்களும் இருந்த மாதிரி தெரியவில்லை. கூடிய சீக்கிரம் தனது திரை நண்பர்களை மட்டும் அழைத்து விருந்து வைப்பார் என்று தெரிகிறது. ஏற்கனவே சமந்தா நாக சைதன்யாவை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து 2021ல் இருவருக்கும் விவாகரத்து நடந்தது. விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதாவை திருமணம் செய்து கொண்டார்.

அதைப்போல ராஜு நிடிமொருவும் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரும் தன்னுடைய முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இவர்களுடைய திருமணம் நடைபெற்று இருக்கிறது.

இவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாக்களில் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை அனுப்பி வருகின்றனர். கூடிய சீக்கிரம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தி ரசிகர்களுக்கு நன்றியை சமந்தா தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
ராம் சுதன்