தனது மகளை இன்ஸ்டாவில் அறிமுகப்படுத்திய சமந்தா.. வட போச்சே மச்சி

by adminram |

3c951a61daff978f185f913cc6fae9ae

தமிழில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவர் மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் தான் முதலில் நடிகையாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், தெலுங்கில் வெளியான ஏ மாயா சேசவா படம் தான் முதலில் வெளியாகியது. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றி சமந்தாவை முன்னணி நடிகையாக்கியது. இவர் தெலுங்கின் முன்னணி நடிகராக இருக்கும் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இருந்தும், இத்தம்பதிக்கு எப்போது குழந்தை என தொடர்ந்து இணையவாசிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், சமந்தா தனது வருங்கால பெண் குழந்தை எனக் கூறி ஒரு வீடியோவை சமீபத்தில் ஷேர் செய்திருந்தார். அதில், குட்டிப்பெண் கராத்தே செய்து கொண்டிருந்தது. சம்மு பொதுவாகவே பிட்னஸில் கவனம் செலுத்துபவர். தொடர்ந்து, உடற்பயிற்சிகள் செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறார். அவர் தனது குழந்தையும் அப்படி பிட்னஸ் விரும்பியாக இருக்க வேண்டும் என நினைப்பதில் தவறு இல்லை என நெட்டிசன்கள் அவரது ஆசைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

8a5e7e80487c1c4a6b0ddff13926db1f

இதை தொடர்ந்து, விரைவில் சம்மு மம்மியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கிசுகிசுப்புகள் கிளம்பி இருக்கிறது.

Next Story