விக்னேஷ்சிவன்-நயன்தாரா இடையே திடீரென புகுந்த சமந்தா!

Published on: February 14, 2020
---Advertisement---

ef60848a821a4185ead1c05ca97ab7b3

இந்த நிலையில் ’தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்திற்குப் பின்னர் நீண்ட இடைவெளிக்குப்பின் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோர் ஜோடியாக நடிக்க உள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் நடித்து உள்ளார்கள் என்பதும் அந்தப் படத்தையும் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் சமந்தா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை தயாரிக்கும் லலித் குமார் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை உறுதி செய்துள்ளார். விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் இந்த படத்தை தயாரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்தான் விஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Comment