ஜூன் மாதம் துவங்கியிருக்கவேண்டிய நான்காவது சீசன் கொரோனா ஊரடங்கினால் குறித்த தேதியில் துவங்கமுடியாமல் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி குறித்து சமீபத்திய ஷாக்கிங் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் வேலை செய்வதற்கே சுமார் 200 முதல் 300 பணியாளர்கள் தேவை படுவார்கள். அவ்வளவு பேரை வைத்துக்கொண்டு நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசின் அனுமதி கொடுக்கவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.
சரி கொரோனா பிரச்னை முடிந்த பிறகு செப்டம்பர் மாதத்தில் துவங்கலாம் என யோசித்தால்.. அந்த சமயத்தில் பருவமழை ஆரம்பமாகிவிடும் அது நவம்பர் மாதம் வரை நீளும் என்பதால் சாத்தியமாகாது. அத்துடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசனும் இந்தியன் 2 மற்றும் தலைவன் இருக்கின்றான் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி இருக்கிறார். எனவே இப்போதுள்ள சூழ்நிலையில் 'பிக் பாஸ் சீசன் 4' நடைபெற வாய்ப்பில்லை என உறுதியாக கூறுகிறார்கள். ஒருவேளை எல்லா பிரச்னை முடிந்து ஜனவரி மாதத்தில் நடக்குமா என்பதை கமல்ஹாசன் தான் முடிவெடுத்து கூறவேண்டும் என தகவல் கூறுகிறது.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…