More

அதே ஸ்டைல்…அதே ஸ்டெப்ஸ்… டிக்டாக்கில் அசத்திய சிம்ரன்… வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன். அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த அவர் சினிமாவில் மார்கெட் இருக்கும் போதே 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார். பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். 

Advertising
Advertising

இந்நிலையில், தற்போது டிக்டாக்கிலும் இணைந்துள்ள அவர் வாலி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஏப்ரல் மாதத்தில்’ பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் இப்போதும் நீங்கள் இளமையாகவே இருக்கிறீர்கள். உங்கள் நடனமும் அப்படியே இருக்கிறது என பாராட்டி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts