
அம்புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனின் காதலியாக நெட்டிசன்களுக்கு அறிமுகமானவர் சனம் ஷெட்டி. தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது இன்ஸ்டாகிராமில் அவரை புரமோட் செய்து வந்தார்.

நிகழ்ச்சியிலிருந்து தர்ஷன் வெளியேறி சில மாதங்களில், தனக்கும் தர்ஷனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், ஆனால் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அதன்பின் அவரின் காதல் கதை முடிவுக்கு வந்தது. சில மாதங்களுக்கு பின் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அவர் நன்றாக விளையாடியும் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும், அவர் எதிர்பார்த்த சினிமா வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. தற்போது, மீண்டும் சமூக வலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், நீச்சல் குளம் அருகே அமர்ந்து அழகாக போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால், அவரின் குட்டி தொப்பை தெரிவதால் நெட்டிசன்கள் அதை கிண்டலடித்து வருகின்றனர்.